Saturday, 28 April 2012

Slice Tamil TVC ADVT

ஒலிம்பிக் வரவேற்பு

ஒலிம்பிக் வரவேற்பு : இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பரத்தில் வணக்கம் என தமிழ் மொழியுடன் ஆரம்பிக்கும் ஒலிம்பிக் வரவேற்பு விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. http://www.london2012.com --------------------- ---------------------

Sunday, 15 April 2012

NS பெருங்காயம் -



---------------------------------------------------------------------------------

பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இது சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது


மருத்துவக் குணங்கள்:

நம்ம தமிழ்நாட்டில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும்.

பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு ஆளை அசத்தும்.

ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் பெருங்காயச்செடி வளருகிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இதில் இரண்டு வகை இருக்கிறது.
காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.

வாயுக்கோளாறை விரைவிலேயே சரி செய்யும் மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும் என்று ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கிறது.

தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

---------------------------