Thursday 21 November 2013

Google Search Reunion Advt கூகுள் தேடல் விளம்பரம்


காணொளியில் வசனங்களை தமிழில் படிக்க 
"captions "  க்ளிக் செய்து " Tamil  " தேர்வு செய்யவும்.


காணொளி




நன்றி Thanks : Google India Youtube  
---------------------------------------------------------------------------

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த நண்பர்கள் இருவர் மீண்டும் சந்திப்பது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் இன்டர்நெட்டை கலக்கி வருகிறது. இரண்டே நாளில் இதுவரை 27 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.கூகுள் நிறுவனம் தனது சர்ச் இன்ஜினை பிரபலப்படுத்துவதற்காக எடுத்த விளம்பரம் . டெல்லியில் வயதான தாத்தா, தனது பேத்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு புத்தகத்தில் இருக்கும் பழைய பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவைக் காட்டி, அதில் இருக்கும் தனது பால்யகால நண்பனான யூசுப்பை பற்றி பேசுகிறார். லாகூரில் வசித்ததையும் நண்பனுடன் சேர்ந்து பட்டம் விட்டது பற்றியும், தான் வசித்த வீடு முன்பு மிகப் பெரிய இரும்பு கேட்டுடன் கூடிய பார்க் இருந்ததையும் சொல்கிறார். நண்பனுடன் சேர்ந்து அவனுடைய தந்தை கடையில் ஜஜாரியா என்ற ஸ்வீட்டை திருடி தின்றதையும் கூறிவிட்டு பெருமூச்சு விடுகிறார்.

கூகுள் சர்ச் மூலம் லாகூரில் வசிக்கும் தாத்தாவின் நண்பனை தேடுகிறார் பேத்தி. முதலில் பார்க்கை கண்டுபிடிக்கும் பேத்தி, லாகூரில் பழைய ஸ்வீட் ஸ்டால் எது என தேடி அதையும் கண்டுபிடிக்கிறார். பாஸல் ஸ்வீட் ஸ்டாலுக்கு போன் செய்கிறார். யூசுப்பின் பேரன் போனை எடுக்கிறார். அவரிடம் தனது தாத்தா பற்றியும் யூசுப் பற்றியும் சொல்லி அவரிடம் பேச முடியுமா எனக் கேட்கிறார். கடையின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் தாத்தாவிடம், ‘தாத்தா டெல்லியில் இருந்து உங்களுக்கு போன்’ எனக் கூறிவிட்டு போனை கொடுக்கிறான்.

Ôஉங்கள் பால்யகால நண்பன் பால்தேவின் பேத்தி சுமன் டெல்லியில் இருந்து பேசுகிறேன் என அறிமுகம் செய்து கொள்ளும் பேத்தி, இருவரும் சேர்ந்து ஜஜாரியா ஸ்வீட்டை திருடி தின்பீர்களாமே... தாத்தா சொன்னார்... உங்களுக்கு ஞாபகம் இருக்காÕ எனக் கேட்கிறார். பசுமையான பழைய நினைவுகளுக்குள் செல்லும் யூசுப், புன்னகைக்கிறார். முகத்தில் சந்தோஷம். இதைப் பார்க்கும் அவரின் பேரன், தாத்தாவை டெல்லி அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான். இந்திய விசா குறித்த விவரங்களை கூகுளில் தேடும் பேரன், பெட்டியில் துணியை அடுக்கி வைத்துக் கொண்டு, டெல்லிக்கு கிளம்புகிறான். மறுநாள் தாத்தாவும் பேத்தியும் ஒரு பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 1947ல் இந்தியாபாகிஸ்தான் பிரிவினையின் போது, ராத்திரியோடு ராத்திரியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா கிளம்பிவந்து விட்டதாகவும் தனது நண்பன் யூசுப்பை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறுகிறார் தாத்தா.

அடுத்த காட்சியில், விமானம் மூலம் டெல்லி வரும் யூசுப்பையும் அவரது பேரனையும் விமான நிலையத்தில் இருந்து டாக்சியில் அழைத்துவரச் சொல்கிறார் பேத்தி.பல்தேவ் வீடு. காலிங் பெல்லை அடிக்கிறார் யூசுப். கதவைத் திறந்த பல்தேவுக்கு அடையாளம் தெரியவில்லை. யார் எனக் கேட்கிறார். Ôஹாப்பி பெர்த் டே மை பிரண்ட்Õ என யூசுப் கூறியதும், நடுங்கும் குரலில் Ôயூசுப்... நீயா... நீயா...Õ என பலமுறை கேட்டபடி, கண் கலங்கும் பல்தேவ், யூசுப்பை கட்டியணைத்துக் கொள்கிறார். அதோடு முடிகிறது விளம்பரம்.

15-Nov-2013 வெள்ளிக்கிழமை தான் இந்த விளம்பரத்தை வெளியிட்டது கூகுள். யூ டியூப்பில் இடம் பிடித்த இந்த விளம்பரத்தை இரண்டே நாளில் 27 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து லைக் போட்டுள்ளனர்.


 நண்பர்கள் இருவரும் கட்டியணைத்துக் கொள்ளும்போது பார்ப்பவர்கள் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது விளம்பரம்.இந்தியா  பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வசிக்க வேண்டிய நிலைமை வந்தது. மோசமான விளைவுகளை ஏற்படுத்திய இந்த பிரிவினை அப்போது காயத்தை ஏற்படுத்தினாலும், இன்னும் பலர் சொந்த பந்தங்களை, நட்புகளை இழந்து தவிக்கின்றனர். அந்த நினைவுகளை தூண்டும் வகையில் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த லட்சக் கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆனாலும் விளம்பரத்தில் வருவதுபோல் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வளவு எளிதாக விசா கிடைத்துவிடாது. விசா வழங்குவதில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாக இரு தரப்பினருக்குமே அதிருப்தி இருக்கிறது. வர்த்தகர்கள், மூத்த குடிமக்கள், பிரிந்த குடும்பத்தினர், புனித பயணம் செய்வோர் ஆகியோருக்கு எளிதில் விசா வழங்கும் வகையில் கடந்த ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இருந்தாலும் விசா தாமதம் தொடர்கிறது.

---------------------------------------------------------------------------------
நன்றி : தினகரன்