Saturday 28 September 2013

சேனல்களை "வியாபிக்கும்' வேட்டி விளம்பரங்கள் ! Vesti Advt


தமிழகத்திலுள்ள முக்கிய செய்தி சேனல்களை,பெரும்பாலும் வேட்டி விளம்பரங்களே ஆக்கிரமித்து வரு கின் றன; அடுத்தடுத்து, ஆறேழு வேட்டி விளம்பரங்கள் வெளியாவதைப் பார்த்து, வேட்டியே கட்டாத நகர்ப்புறத்துஆண்கள் ஆச்சரியப்படுகின்றனர்.


கிரிக்கெட் வீரர்கள்:தனியார் தொலைக்காட்சிகள் அதிகமில்லாத காலத்தில், தூர்தர்ஷனின் விளம்பரங்களில் கிராசிம் குவாலியர், சியராம்ஸ், ஒன்லி விமல், ரேமாண்ட் போன்ற சூட்டிங், சர்ட்டிங் நிறுவனங்களின் விளம்பரங்களே அதிகம் இடம் பெறும். அதிலும், வட மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பட்டோடி, கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் மாடல்கள் நடித்திருப்பார்கள்

.
இப்போது அரசே இலவசமாக கலர் "டிவி' வழங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் "டிவி' இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதற்கேற்ப, தனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கையும் புற்றீசலாகப் பெருகி விட்டன. இந்த சமூக மாற்றம் நிகழ்ந்துள்ள இதே காலகட்டத்தில்தான், வேட்டி அணிவோரின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து, தமிழக ஆண்களில், 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், பேன்ட், சட்டையை தங்களது அன்றாட உடையாக மாற்றிக் கொண்டுள்ளனர்; விவசாயிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டுமே, இன்னும் வேட்டி கட்டி வருகின்றனர்.

ஏறத்தாழ, 3 கோடிக்கும் அதிகமான ஆண்கள், பேன்ட், சட்டை மட்டுமே அணிந்து வரும் நிலையில், அவர்கள் விரும்பி அணியும் பேண்ட், சட்டை, ஜீன்ஸ், டி.ஷர்ட் போன்றவற்றின் "பிராண்டடு' நிறுவன விளம்பரங்களை தனியார் தொலைக்காட்சிகளில் அதிகம் பார்க்க முடியவில்லை.
மாறாக, மிகக்குறைந்த சதவீதமாகவுள்ள வேட்டி அணிவோரை ஈர்ப்பதற்கான விளம்பரங்களே, தனியார் தொலைக்காட்சிகளின் விளம்பர இடைவேளைகளை அதிகம் ஆக்கிரமித்துள்ளன. இன்னும் குறிப்பாக, தமிழ் செய்தி சேனல்களை, பெரும்பாலும் வேட்டி விளம்பரங்களே காப்பாற்றி வருவதாகத் தெரிகிறது.

ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகளுக்கு ஜெயராம்,உதயம் வேஷ்டிகளுக்கு மம்மூட்டி, சிபி வேஷ்டிகளுக்கு ரகுமான், எம்.சி.ஆர்.,வேட்டிகளுக்கு மோகன்லால் மற்றும் சரத்குமார், நேஷனல் வேட்டிகளுக்கு ராதாரவி, ஆலயா வேட்டிகளுக்கு ஸ்ரீகாந்த், பூமர் வேட்டிகளுக்கு கார்த்திக் என, நடிகர்களே இதில் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.


#வேட்டி விளம்பரங்கள்






இவற்றைத் தவிர்த்து, மினிஸ்டர் ஒயிட் போன்ற வெள்ளைச் சட்டைகள் மட்டுமே தயாரிக்கும் நிறுவனங்களும், "டிவி' மற்றும் பத்திரிகை விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.இந்த விளம்பரங்களிலும், தமிழ் நடிகர்களை விட மலையாள நடிகர்களே அதிகம் இடம் பெற்றுள்ளதற்குக் காரணம், தமிழகத்தை விட கேரளாவில் வேஷ்டி கட்டும் ஆண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகஇருப்பதுதான்.

சாதாரண வேட்டி, 200 ரூபாயில்இருந்து, 500 ரூபாய் வரை விற்கும் நிலையில், குறிப்பிட்ட சில "பிராண்டடு' நிறுவனங்களின் வேஷ்டிகள் மற்றும் சட்டைகளின் விலை, 500ல் துவங்கி, 5,000 ரூபாய் வரை உள்ளன. இவற்றைத் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களின் வருடாந்திர உற்பத்தி மற்றும் விற்பனையும், ஆயிரம் கோடியைத் தொட்டு நிற்கின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


#வேட்டி விளம்பரங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



நன்றி :  தினமலர் : 19-Sep-2013