Monday, 14 April 2014

தமிழ் பேசும் உடைகள் ! Tamil Tshirts இலவம் iLavam

இலவம் இணையதளத்தின் மூலம் இலவம் ( iLavam ) - அழகு தமிழ் ஆடைகளின் அணிவகுப்பு Facebook : https://www.facebook.com/brandilavam தமிழ்ப் பேசும் ஆடைகள்! ஆங்கில வாசகங்கள் எழுதிய டி-ஷர்ட்களைத்தான் இன்றைய இளைஞர்கள் அணிகின்றனர். ஆங்கில வாசகங்களுக்கு பதிலாக தமிழ் வாசகங்களை டி-ஷர்ட்களில் எழுதினால்...? இப்படி ஒரு வித்தியாசமான யோசனை சென்னையைச் சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கு வர, இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தமிழ் வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை இணையதளத்தின் மூலம் அமோகமாக விற்றுவருகிறார்கள் லெனின், யுவராஜ், கோபிநாத் என்கிற இளைஞர்கள். சென்னைய சேந்த 3 இளைஞர்களின் தொழில்முனையும் ஆர்வமும் தமிழ் பற்றும் ஒன்றுசேர உருவெடுத்தது தான் இந்த இலவம். ஓரே கல்லூரியை சேர்ந்த லெனின் கோபிநாத் யுவராஜ் 2012 ஆம் ஆண்டு கல்லூரியில் இருவர் இயந்திரவிலும் படித்தவர்கள். மூவருக்கு உள்ள ஒற்றுமை தமிழ் மீது இருக்கும் ஆர்வமும் தொழில் முனையும் ஈடுபாடும்தான். மூவரும் நாம் செய்யும் தொழில் இந்த சமுதாயத்திற்க்கும் பயனுள்ளதாக அமையவேண்டும் அதே சமயம், அது வியாபார ரீதியாகவும் விவாதித்து கொண்டிருக்கும்போது பரபரப்பான சென்னை சாலையில் பல யுவன் யுவத்கள் டி-சர்ட்டுகளை அணித்திருப்பது கண்ணில்பட ஆனால் அதில் இருக்கும் வாசகங்கள் எல்லாமே ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. அதிலும் சில வாசகங்கள் வக்கிரமாகவும் இருப்பதை கண்டனர். நாம் செய்யும் தொழில் லாபம் மட்டும் தருவதாக இல்லாமல் சமுதாயத்திற்க்கும் பயனலிக்கவேண்டும் என்று நினைத்த மூவரும். இந்த டி-சர்ட்டுகளில் ஆங்கில வாசகங்களுக்கு பதில் அழகிய தமிழ் வார்தைகளை பதித்தால் என்ன அன்று தோன்றியது. உலக மொழிகளே பழமை வாய்ந்ததாகவும், மிக அழகிய மொழியாகிய செம்மொழியான தமிழ் மொழியின் மகன்களாக பிறந்துவிட்டு இதை செய்யாமல் இருந்தால் தமிழனாக பிறந்த தடமே இல்லாமல் போய்விடும் என்பதால் இதை தொடங்கும் முயற்சியி ஈடுபட்டனர். தமிழில் வாசகங்களுக்கா பஞ்சம் . நம் முன்னோர் எழுதாத தமிழா ! பஞ்சமில்லாத வார்தைகள் எல்லாம் சரி ஆனால் படித்ததோ பொறியியல் இது பற்றி எதுவுமே தெரியாதே என்றபோதும் கற்றுகொண்டு செய்வோம் என்று முடிவெடுத்த இவர்கள். உலகத்திற்க்கே டி-ஸ்ர்ட் தயாரிக்கும் திருப்பூரில் டிசர்டுகளை தயாரிக்க முடிவு செய்தனர். இதை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று யோசிக்குபோதுதான் இணையம் மூலம் இதை விற்பதே இப்போதைய கால வியாபார யுக்தி. இணையமே அதிவிரைவில் உலக தமிழர்களை இணைக்கும் பாலமாகவும் இளைஞர்களை ஈர்க்கும் விஷயமாக இருந்ததால் இணையத்தி வடிவமைக்க ஆரமித்தனர். எல்லாவற்றிர்க்கும் முன் பெயர் வைக்கவேண்டும். என்ன பெயர் வைக்கலாம் என்று கலந்தாசிக்கும்போது பெயர் வித்தியாசமாகவும் தமிழ் மொழியிலும் அதே சமயம் யாரும் உபயோகிக்காத பெயராகவும் இருக்கவேன்டும் என தீர்மானித்து பல பெயர்களை பட்டியலிட்டு கடைசியில் "இலவம்" என பெயரிடபட்டு அதன் பெயரிலேயே இணையமும் ஆரமிக்கபட்டது. மூவரு நடுதரவர்கத்தை சார்ந்தவர்கள் இந்த தொழிலில் பெரிய முதலீடு போடமுடியாது என்பதால். சிறிய வேலை முதல் பெரிய வேலை வரை இவர்களே கற்று கொண்டு அதை செய்து பணத்தை மிச்சபடுத்தி அதையே ஒரு புதிய அனுபவமாகவும் எடுத்து கொண்டனர்.இணயமும் முழுக்க முழுக்க இவர்களாலே வடிவமைக்கபட்டது. ஆடைக்ளைல் வரும் வாசகங்களும் அதை அச்சிடுவது வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது என அனைத்து வேலைகளுமே மூவரும் மாறி மாறி பிரித்து செய்ய தொடங்கினர். முகநூல் மின்னஞ்சல் போன்றவற்றை விளம்பரங்களு, பயன்படுத்தி அதன்மூலமே புதிய வாடிக்கையாளர்களை சம்பாதித்தனர். புதிய புதிய முயற்ச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக அறிமுக படுத்தி சோதனைகளை அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆடைகளில் பாரதியார், வள்ளுவன்,விவேகானந்தர், பாரதிதாசன், பெரியார், பூங்குன்றனார், தொல்காப்பியர் ஆகியோரின் வாசகங்களும் அவர்களை பற்றி பெருமை படுத்தும் வாசகங்களும் இடம் பிடித்து இருக்கின்றன. தமிழனாய் இருப்பதில் எவ்வளவு பெருமை என்று தமிழின் அருமை பெருமைகளை பறைசாற்றும் வாசகங்களும் இடம்பெற்று இருக்கின்றன இலவத்தின் அடிப்படை நோக்கமே தமிழர்களை பெருமை படுத்தும் தமிழ் பேசும் ஆடைகளை தமிழ் நாட்டிலே தயாரித்து அதை உலகம் முழுக்க இருக்கும் மக்களுக்கு கொண்டுசேர்க்கவேண்டும் என்பதே அதால் தான் இலவம் எனபது "தமிழர்களால் தமிழர்களுக்கு தமிழில்" என்று சொல்லுகின்றனர். இணைய வழி வியாபாரம் என்பதலாம் தமிழகம், இந்தியா மற்றுமல்லாது உலகம் முழுதும் இருக்கும் தமிழர்கள் இதை வாங்க ஆரவம் காட்டி வருகின்றனர். விரைவில் உலக அளவில் எல்லா நாடுகளிலும் ஒரு தழ் தயாரிப்பு விற்க்கபடவேண்டும். உலகத்திற்க்கே ஆடை தயாரிக்கும் திருபூர் இதுவரைக்கும் ஒரு வியாபார குறியீய்ட்டைகூட உருவாக்கவில்லை. இலவம் என்பது ஒரு தமிழனின் வியாபார குறியீடு என உலகம் பேசவேண்டும். அது தமிழுக்கே சமர்பிக்கவேண்டும் எனபதே இலவத்தின் வாழ்நாள் லட்சியம். _____________________________

தமிழ் மொழி விழா 2014 - சிங்கப்பூர் Tamil Mozhi Vizha 2014 Theme Song






தமிழ் மொழி  விழா 2014 - சிங்கப்பூர்
The official theme song for Tamil Mozhi Vizha 2014....