கோலாலம்பூர் – கடந்த வருடங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த அஸ்ட்ரோவின் ‘பொங்கு தமிழ்’ விழா, பல அசத்தலான படைப்புகளோடு இந்த ஆண்டு, நாடு தழுவிய அளவில் மிகப் பிரம்மாண்டமாய் நடைபெறவுள்ளது.
மறந்து போன, மறைக்கப்பட்ட கலைகளை மீண்டும் மலேசிய இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோ ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது.
கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி இவ்வாண்டு வரை சுங்கைப் பட்டாணி, புந்தோங், போர்ட் டிக்சன், பத்தாங் பெர்ஜூந்தாய், ஜோகூர், குளுவாங், காரக், பகாவ், பிரிக்பீல்ட்ஸ், பத்துமலை, தைப்பிங், மலாக்கா, பினாங்கு, கிள்ளான், சிரம்பான், ஸ்கூடாய் ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
மலேசியாவில் மட்டுமின்றி, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமான கலைஞர்கள், இதுவரை பார்த்திடாத தமிழ் கிராமிய கலைகளை நம் கண் முன்னே படைக்கவிருக்கின்றனர். அதோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வதோடு, நாவுக்குச் சுவையான சங்கக் கால உணவுகளையும் சுவைத்துப் பார்க்கலாம்.
பொங்கு தமிழ் முன்னோட்டத்தினை இங்கே காணலாம்:
No comments:
Post a Comment